Pandian Stores 2 today episode 29th May 2024 Review | Vijay Television
Pandian Stores 2 Raji Love PC Hotstar.jpg
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று தங்கமயில் புது இடத்தில் சற்றே வித்தியாசமாக உணருகிறார். அவரை இது உன் வீடு போல் நினைத்துக் கொள் என கோமதி கூறுகிறார். பின்னர் தம்பிகளும் பழனிவேலும் சேர்ந்து முதலிரவுக்கு அறையை ஏற்பாடு செய்கிறார்கள. பூ பழம் இது எல்லாம் வைத்து அவர்கள் அலங்கரிக்க பழனிவேல் தனக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என புலம்பிக் கொண்டிருக்கிறார்.
குமரவேல் ஏன் இன்னும் சண்டைக்கு யாரும் வரவில்லை தான் மீனா மற்றும் ராஜியை கடத்தியதை கூறிவிட்டார்களா இல்லையா என சந்தேகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறார். சக்திவேலும் அப்பத்தாவும் அவரை சற்று சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். பின்னர் புது மருமகளை பற்றி மகிழ்ச்சியாக அப்பத்தா வடிவு மற்றும் மாரியிடம் கூறுகிறார் தங்கமயில் ராஜியிடம் அவரின் காதல் கதையை பற்றி கேட்க ராஜி இடத்தை எப்பொழுது காலி செய்யலாம் என பார்க்கிறார். கதிர் முதல் இரவு அறையில் பழங்களை அடுக்கிக் கொண்டிருக்க அதே சமயத்தில் ராஜி உள்ளே நுழைகிறார். ஒருவரை ஒருவர் இடித்து கீழே விழ பின்னர் இருவரின் கைகளும் பூவை சரி செய்யும் பொழுது உரச சற்றே காதல் எட்டிப் பார்க்கிறது.