தங்கமயிலுக்கு ஷாக்! Pandian Stores 2 today episode 2nd June 2024 review
Pandian Stores 2 Thangamayil shocked PC Hotstar.jpg
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஸ்பெஷல் எபிசோட் என்பதால் நிறைய விஷயங்கள் நடக்கும் என பார்த்தால, கிட்டத்தட்ட பழக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களை ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் இழுத்துச் சென்றது போல் இருந்தது.
முதலில் தங்கமயில் எழுப்பிய போது கத்திய செந்தில் பின்னர் அதை நினைத்து வருத்தப்பட கூச்சப்பட அவரை சரவணன் தேற்றுகிரார். அடுத்ததாக தங்க மயிலின் வீட்டு விருந்திற்கு யார் செல்லலாம் என பேச்சு நடக்கிறது. நான் வரவில்லை நான் வரவில்லை என அனைவரும் கூறிய பிறகு தங்கமயில் அதுக்காக வருந்துகிறார். கடைசியாக சரவணன் தங்கமயில் அரசி பழனிவேல் கதிர் மற்றும் ராஜி ஆறு பேரும் போவதாக முடிவாகிறது. செந்திலும் மீனாவும் வேலைக்கு செல்கிறார்கள் மீனாவை மாலையில் உணவகத்திற்கு அழைத்து செல்வதாக வாக்கு கொடுக்கிறார் செந்தில்.
தங்க மயிலிடம் நீ நீயாகவே இரு என சரவணன் அறிவுரை கூறுகிறார். தங்கமயில் அவருக்கு பிடித்த சேலையை அணிந்து கொண்டு வெளியே வருகிறார் கதிர் ராஜிக்கு சேலை மற்றும் பிளவுஸ் எடுத்துக் கொடுக்கிறார். அனைவரும் கிளம்பி விருந்திற்கு செல்கிறார்கள் அங்கு இவர்கள் போன நேரத்திலேயே பணம் கொடுத்த ஒருவர் வந்து விட அவரை சமாளித்து அனுப்புகிறார்கள். திருமண நகைக்காக வாங்கிய கடன் எனக் கூறுகிறார்கள் சரவணன் நகைகளை அடமானம் வைக்கலாமே எனக் கூறுகிறார். ஏனென்றால் அம்மா சொன்னது போல் அனைத்து நகைகளையும் போட்டுக் கொண்டு கிளம்பிய தங்க மயிலிடமிருந்து குழலி அனைத்து நகைகளையும் வாங்கி பீரோவில் வைத்து விட்டார். இத்தனை நகைகளை போட்டு செல்ல வேண்டாம் என கூறிவிட்டார் அது பாதுகாப்பில்லை எனவும் காரணம் கூறினார் இது பாக்கியத்திற்கு மிகுந்த பதட்டத்தை கொடுக்கிறது. அது கவரிங் நகைகள் என்பதால் எப்படியாவது மீண்டும் ஒருமுறை வரும்பொழுது எடுத்து வருமாறு தன் மகளிடம் கூறுகிறார். அதே காரணத்திற்காக சரவணன் இடமும் அந்த நகைகள் பற்றிய பேச்சை மாற்றி விடுகிறார், தாங்களே பணத்தை சமாளித்து விடுவோம் என கூறிவிடுகிறார். கதிரும் ராஜியும் சற்று தாமதமாகவே வந்து சேர்கிறார்கள். வழி மாறிவிட்டதாக கதிர் கூறுகிறார்.
விருந்து முடிந்து திரும்ப செல்லும் பொழுதும் அனைவரும் ஒன்றாக வந்து விட கதிரும் ராஜ்ஜியம் தாமதமாக வருகிறார்கள். ராஜி வெயிலில் மயக்கம் வந்ததாக கூறுகிறார். பாண்டியன் கதிரை திட்டி கதிரின் திருமணத்தைப் பற்றியும் தங்க மயிலிடம் புலம்புகிறார். இது ராஜிக்கு மிக வருத்தத்தை கொடுக்கிறது. இதைப் பற்றி கூறினாலும் பாண்டியனுக்கு புரியவில்லை ராஜி கோமதி மற்றும் அரசிடம் கதிரை மட்டுமே பாண்டியன் மிகவும் திட்டுவதாக வருத்தம் அடைகிறார். கடைசியாக செந்தில் மீனாவை பார்க்க செல்லலாம் என நினைத்தால் பாண்டியன் அதை வேண்டாம் என கூறிவிடுகிறார்.