கடுப்பான தங்கமயில்! Pandian Stores 2 today episode 30th May 2024 Review
Pandian Stores 2 Thangamayil upset PC Hotstar.jpg
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முதல் இரவு அறையில் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு கதிரும் ராஜியும் சின்னதாய் ஒரு ரொமான்ஸில் ஈடுபட உள்ளே செந்தில் வந்து விடுகிறார். அவர் அவர்களை கிண்டல் செய்ய மீனாவும் அதில் சேர்ந்து கொள்கிறார். வெட்கத்தில் ராஜி ஓடிவிட கதிர் மீனாவையும் செந்திலையும் அந்த அறையில் பூட்டி விட்டு ஓடி விடுகிறார்.
தங்கமயில் ராஜியின் மனம் புண்படுமாறு உனக்கு வருத்தமாக இல்லையா நீ ஓடி வந்து திருமணம் செய்ததால் இதில் இந்த சடங்குகள் நடக்கவில்லை என்பது கவலை அழிக்கவில்லையா என கேட்கிறார். இதனால் ராஜியின் முகம் வாடுகிறது. வெளியே பாண்டியன் திருமண வாழ்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது திருமண வாழ்க்கை என்றால் என்ன என்று சரவணன் இடம் நிறுத்தாமல் அறிவுரைகள் கூறி வருகிறார். அதை பார்த்து பழனிவேல் தலையில் அடித்துக் கொள்கிறார்.
பின்னர் முதல் இரவு அறைக்குள் தங்க மயிலை அனுப்ப தயாராகும் பொழுது அவர் பால் சொம்பு இல்லையா என கேட்கிறார். அனைவரும் சிரித்து விட்டு சொம்பு உள்ளே இருக்கிறது என பதில் அளிக்கிறார்கள். கதவைத் திறந்த தங்கமயிலுக்கு அதிர்ச்சி உள்ளே மீனாவும் செந்திலும் ஒன்றாக நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து கோமதி மற்றும் ராஜி கிண்டல் செய்கிறார்கள் தங்க மயிலோ ஆத்திரத்தில் உள்ளே செல்கிறார்.