தங்கமயில் தரும் ஷாக்! Pandian Stores 2 today episode 31st May 2024 Review
Pandian Stores 2 Raji surprise PC Hotstar.jpg
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முதல் இரவுக்கு ஏற்பாடு செய்தும் மாப்பிள்ளை சரவணனை விடாமல் அறிவுரை கூறுகிறார் பாண்டியன். பின்னர் கதிரும் அப்பா சிறிது நேரம் அவர் மன மகிழ்ச்சிக்காக அறிவுரை கூறட்டும் எனக் கூறிவிடுகிறார். ஒரு வழியாக சரவணன் அறிவுரையிலிருந்து தப்பித்து முதலிரவு அறைக்குள் நுழைகிறார். அதற்கே அவர் மிகவும் கூச்சப்படுகிறார். நுழைந்து என்ன ஆனது என்று அவர் விளக்கி கொண்டிருக்கும் பொழுது தங்க மயிலிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவர் திரும்பிப் பார்த்தால் தங்கமயில் முன்னரே உறங்கி இருக்கிறார். அருகில் படுத்து இவரும் உறங்கி விடுகிறார். நடு இரவில் திடீரென விழிக்கும் தங்கமயில் தான் உறங்கி விட்டதை உணர்ந்து அழுகிறார். சரவணன் அவரை தேற்றுகிறார்.
காலையில் கோமதி எழுந்து வந்து பார்த்தால் வாசலில் கோலம் போடப்பட்டிருக்கிறது. சமையலும் முடிந்தாயிற்று. டீ காபியும் போடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த மீனா செய்தாரா என அவர் சந்தேகப்படுகிறார். மீனாவும் ராஜியும் தாங்கள் செய்யவில்லை எனக் கூறுகிறார்கள். அந்த சமயத்தில் பூஜையறையில் இருந்து தங்கமயில் குளித்து சாம்பிராணி புகையோடு வெளி வருகிறார். தான் அனைத்தையும் செய்தேன் என கூறுகிறார். எப்பொழுதும் நாலு மணிக்கே எழுவது வழக்கம் எனவும் கூற ராஜியும் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.