கடுப்பான மீனா | Pandian Stores 2 today episode 3rd June 2024 review
IMG 20240603 140439.jpg
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று செந்திலை மீனாவுடன் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம் என பாண்டியன் கூறுகிறார். மீனா அலுவலகத்தில் காத்திருக்க செந்தில் பொய் கூறிவிட்டு அவரை உணவகத்துக்கு அழைத்து செல்கிறார். பாண்டியன் அப்பொழுது தொலைபேசியில் அழைக்க அவரிடம் இருசக்கர வாகனம் பழுதடைந்து விட்டது என பொய் கூறுகிறார். ஆனால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அதே உணவகத்திற்கு வந்த பாண்டியன் பார்த்துவிடுகிறார். நல்ல வேலையாக வேறு எந்த பிரச்சனையும் அவர் அங்கே செய்யவில்லை. மீனா அவரது அலுவலகத்தில் அவரை மூன்று நாட்கள் சென்னையில் ட்ரெய்னிங்காக வர சொன்னதாக கூறுகிறார்.
வீட்டிலோ தங்க மயிலின் அராஜகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அனைவருக்கும் இடியாப்பம் பிடுங்கி விடுவதாக அவர் கூறுகிறார். கோமதி வேண்டாம் அரிசி வடித்து விடலாம் என கூறுகிறார். இதற்கிடையில் மீனா வாங்கி வந்த மைசூர் போண்டாவை என்ன என்ன என்று தெரியாது என கூறி யாரையும் சாப்பிட விடாமல் பிடுங்கி வைத்து விடுகிறார். மீனா ராஜியிடம் புலம்ப ராஜி மீனாவிடம் புலம்ப அனைவரும் சேர்ந்து பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல் தங்கமயில் அராஜகங்களை யார் நிறுத்துவது என யோசிக்கிறார்கள்.