Pandian Stores Today episode 03.03.2022 Written Update | Vijay Television
Pandian Stores Meena Birthday upset
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஜீவா தனக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவார் என நினைத்து மீனா தூங்கிப் போக ஜீவாவும் களைப்பில் உறங்கி விடுகிறார். ஆனால், அதே சமயத்தில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கண்ணன் ஐஸ்வர்யாவை எழுப்பி ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்து, வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்துக் கொள்கிறார்.
காலையில் தனம் மற்றும் முல்லை, ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, சேலையை பரிசாக கொடுக்கிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு கூட்டிப் போக திட்டமிடுகிறார். அவர் கொடுத்த பரிசை பற்றி தெரிந்து கொண்ட மீனா மிகவும் வருத்தப்படுகிறார்.
ஜீவா நடுவில் வந்தும் ஐஸ்வர்யாவுக்கு பரிசாக பணத்தை கொடுத்துவிட்டு, கடை வேலை என மீனாவை பார்க்காமல் கிளம்பி விடுகிறார். வருத்தத்தில் மீனா அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார்.