பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, இன்னும் முழுதாக உடல்நலம் தேராத லட்சுமி அம்மா கதிர் மற்றும் முல்லையிடம் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு விரும்பி கேட்டுக் கொள்கிறார் அவர்களும் வெட்கப்பட்டு ஒத்துக்கொள்கிறார்கள்.
பின்னர், யோசனையாய் இருக்கும் கண்ணன், ஐஸ்வர்யாவை கல்லூரிக்கு செல்லுமாறு கோபமாக கூறிவிட்டு வேலைதேடி கிளம்புகிறார். பல இடங்களில் வேலை தேடிக் கிடைக்காத போதிலும், ஒரு உணவகத்தில் அவர் வேலை தேடுவதை கதிர் பார்த்து மனமுடைந்து போகிறார். பின்னர் ஜீவாவிடம் இந்த விஷயத்தை கூற இருவரும் தங்கள் கஷ்டத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அங்கு வந்த ஜனார்த்தனனிடம் கதிர் ஒரு உதவியாக கண்ணனை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்