வேதனையில் மீனா – Pandian Stores today episode 09.11.2021 review
Pandian Stores Meena Hurt
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று மீண்டும் கதிரும் முல்லையும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்த காட்சி மீண்டும் மீண்டும் வருவதால் சற்று அலுப்பு தந்தாலும், விரைவில் இதற்கான தொடக்கம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
பின்னர், மீண்டும் அலுப்பு தரும் வகையில், ஜீவா நூறாவது முறையாக மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இனி இப்படி நடக்காது என கூறுகிறார். மீனாவோ தனத்திற்கும் முல்லைக்கு இங்கிருக்கும் உரிமை தனக்கு இல்லை என்று கூறுகிறார். நமக்கும் அது சரியாகவே படுகிறது.
அடுத்த நாள் ஜீவா மூர்த்தி மற்றும் தனம் கண்ணனுக்காகவே மீனா குழந்தையை வெளியே எடுத்து சென்றார் என்பதை கூறுகிறார். கடைசியாக, ஜனார்த்தனன் கண்ணன் ஒழுங்காக வேலை செய்யாததைக் திட்டி விட்டு, பின்னர் இவர்களுக்கு உதவி செய்யப்போய் தன் மகள் மற்றவர்களிடம் பேச்சு வாங்குவதை குறித்து ஆதங்கப்படுகிறார்.