Pandian Stores Today episode 01-March-2022 review | Vijay Television
Pandian Stores Mullai dream
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஐஸ்வர்யாவை அனைவரும் நன்றாக வேலை செய்வதாக புகழ்வதை மீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எரிச்சல்படுகிறார். முல்லைக்கு இரவு கனவில் அவர் கையில் ஒரு குழந்தையுடன் சிரித்துக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. விடியற்காலை கனவு பலிக்கும் என்று அவர் கூற, கதிரோ அதிர்ந்து போய் நிற்கிறார்.
அடுத்த நாள் காலை கண்ணனுக்கு உணவு என்ன சமைக்கலாம் என தனம் கேட்க, தானே சமைத்து விடுவதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவின் படிப்பைப் பற்றி பேச வேண்டாம் எனவும் கூறுகிறார்.
மீனா, இந்த சமயத்தில் தெரியாமல், ஐஸ்வர்யா போட்ட கோலத்தை அழித்து விடுகிறார். கண்ணனை வழியனுப்பிய ஐஸ்வர்யா இதை பார்த்து விடுகிறார். இதைவைத்து மீனா விற்கும் ஐஸ்வர்யா விற்கும் சண்டை வருகிறது. தனம் மிகவும் கோபம் ஆகிறார். இவர்களை சமாதானப்படுத்த முல்லை எடுத்த முயற்சிகள் தோல்வி அடைகிறது.