ஆபத்தில் கதிர் – Pandian Stores today episode 11.11.2021 review
Pandian Stores Kathir helps Kannan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கட்டிட காண்ட்ராக்டரிடம் கொடுக்கவேண்டிய பணத்திலிருந்து ஒரு பகுதியை கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கொடுக்கிறார். கண்ணனும் வீட்டிற்குப் போக பயப்பட்டு கோயில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்.
கதிர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனனிடம் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள். ஐஸ்வர்யா கோபமாக ஜனார்த்தனனிடம் பேச, கண்ணனும் கோபமாக தான் இந்த பணத்தை திருடவில்லை இன்னும் எனவும் இது வேறொரு பணம் எனவும் கூறி வருகிறார். ஆனால், துளியளவும் ஐஸ்வர்யாவிற்குதான் செய்த பொறுப்பின்மைதான் பணம் தொலைந்தது என்பதைப் பற்றிய கவலை இருப்பதாக தெரியவில்லை.
வீட்டிற்கு வந்த கதிர் ஒழுங்காக இல்லை என்பதை முல்லை கண்டுபிடித்து விடுகிறார். பின்னர், கதிர் முல்லை இடம் அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். முல்லை வீட்டில் கதிரில் பெயர் கெட்டு விடுமோ என வருத்தப்படுகிறார். கடைசியாக ,கண்ணனும் ஐஸ்வர்யாவும் மீனாவிடம் சிரித்துப் பேசிவிட்டு உண்மையை கூற ஐஸ்வர்யா வரும்பொழுது, கண்ணன் அதை தடுத்து விடுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் அடுத்து என்ன செய்வது என யோசிக்கிறார்கள்.