அம்மாவின் இறப்புக்கு காரணம் ஆகும் கண்ணன் – Pandian Stores today episode
Pandian Stores Lakshmi death
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ,வீட்டிற்கு வந்து வாசலில் நிற்கும் கண்ணனைப் பார்த்து தினமும் முல்லையும் அதிர்ச்சியாகிறார்கள். தனத்தின் அம்மா கண்ணனை திட்டி அவர் செய்ததெல்லாம் போதும் என அவரை விரட்டி விடுகிறார்.
ஐஸ்வர்யா தன் வேலையை மிகச் சிறப்பாக செய்வதை பார்த்து, ஜனார்த்தனன் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே கண்ணனுக்கும் புதிதாக திருச்சியில் இருந்து லோடு ஏத்தி வரும் வேலையை ஒப்படைக்கிறார். கண்ணன் மறந்து அவரது மொபைல் போனை கடைக்கு உள்ளேயே வைத்து விடுகிறார். வீட்டிலோ லக்ஷ்மி அம்மா வித்தியாசமாக நடப்பதைப் பார்த்து அனைவரும் அதிசயம் கொள்கிறார்கள்.
அடுத்த நாள் அவரது அப்பாவின் நினைவு நாள். இந்த நாளே, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் விரும்பத்தகாத ஒரு செயலால், லட்சுமி அம்மாவுக்கும் கடைசி நாளாக அமைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன.