Pandian Stores today episode 12.03.2022 review | Vijay Television
Pandian Stores Kathir lies
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஜனார்த்தனன் சிகிச்சைக்கு பிறகு கண் விழிக்கிறார். அவரது குடும்பமே அதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறது.அவரோ ஜீவாவும் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்க வந்தவர்கள் அந்த வீட்டை இடித்து விடுவோம் என கூறியதால், அதிக விலை கூறி அவர்களை வாங்க விடாமல் குடும்பமே செய்கிறது. ஜீவா ஜனார்த்தனனுக்கு மாரடைப்பு என்கிற தகவலை கூற, தனமும் மூர்த்தியும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு ஜீவா ஜனார்த்தனன் முழுவதுமாக குணமடையும் வரை அவரது தொழிலை பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார் மூர்த்தி.
முருகனும் கஸ்தூரியும் முல்லையை பார்க்க வர முல்லை கதிர் குறித்து தனக்கு சந்தேகமாக இருப்பதாக கூறுகிறார். தனக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக தோன்றுகிறது என சொல்கிறார். இதுகுறித்து முருகன் கதிரை தனியாக பார்த்து கேட்கும்போதும் கதிர் முல்லைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பொய் கூறுகிறார்.