பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, தனத்திடம் லட்சுமிஅம்மா மனம் விட்டு பேசுகிறார். எந்த அளவிற்கு அவர் கண்ணனை பிரிந்து விடுகிறார் என்பது தெரிகிறது. குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பற்றி மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் தன்னுடைய தங்கச்சங்கிலியை மற்றும் வளையல்களை தனம் தான் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தனத்தின் குழந்தைக்கு பாண்டியன் என அவரது கணவர் பெயரையே வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். அவர் பேசுவது அனைத்தும் தனத்துக்கு வித்தியாசமாக இருக்கிறது.
பின்னர், இதை அவர் ஜீவா, மூர்த்தி மற்றும், கதிரிடம் கூறுகிறார். கதிரும் ஜீவாவும் தங்களது தாய் உறங்குவதை பார்க்கிறார்கள். இரவில் கதிருக்கு ஒரு கெட்ட கனவு வருகிறது. அதில் லக்ஷ்மி அம்மா நாற்காலியில் அமராமல் நின்று கொண்டிருக்கிறார். அருகில் கதிர் சென்றால் மறைந்து இன்னும் தள்ளிப் போகிறார். அங்கு ஒரே புகை மூட்டமாக இருக்கிறது.
பயந்து எழுந்த கதிருக்கு முல்லை ஆறுதல் கூற, கதிர் தூங்க முடியாமல் தன் தாயின் அருகில் சென்று பார்க்கிறார். அவர் இன்னும் மூச்சு விடுவதை பார்த்து நிம்மதி ஆகிறார். ஆனால் நாளை அந்த கெட்ட கனவு பலிக்கப் போகிறதோ என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.