பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லட்சுமி அம்மாவின் மரணத்தை குடும்பமே ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். தனம் மிகவும் தாமதமாக உண்மைநிலையை உணருகிறார், உடைந்து போகிறார். தனத்தின் அம்மா மயங்கிய தனத்தை சரி செய்துவிட்டு, அவரது மகன் ஜகாவிடம் சம்பவத்தை தெரிவிக்கிறார். அவரும் கலங்கிப் போய் வருகிறார். அவரை பார்த்தவுடன் சகோதரர்கள் மேலும் உடைந்து போகிறார்கள்.
பின்னர் கதிரும் ஜீவாவும் தனியாக வந்து தங்களது கவலைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவைவை சரி செய்ய மீனா வருகிறார். அழும் கயல் பாப்பாவை முல்லை பார்த்துக்கொள்கிறார். பின்னர், முருகன் மாமாவிடம் ஜகா விஷயத்தை கூற, அவரும் ரோட்டிலேயே உடைந்து போகிறார்.
சரியான நேரத்தில் தகவல் சேர்ந்து கண்ணன் வருவாரா மாட்டாரா என்பது இப்பொழுது எல்லாருடைய கேள்வியாக இருக்கிறது.