Pandian Stores Today Episode| 18.01.2023 Review | Vijay Tv
Pandian Stores Dhanam in trouble
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று வீட்டின் பெண்கள் அனைவரும் ஹோட்டலில் அதிர்ச்சியோடு அமர்ந்திருக்க, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வருகிறார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் வீடியோ ஆதாரத்துடன் கரப்பான் பூச்சி பிரியாணி இருந்ததாக காண்பிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், அதிகாரிகள் இவர்கள் அனைவரையும் வெளியே தள்ளி ஹோட்டலுக்கு சீல் வைக்கிறார்கள்.
இந்த விஷயத்தை அங்கு வந்த கண்ணன் அறிந்து கொண்டு தனது சகோதரர்களிடம் இந்த விஷயத்தை கூறி அவர்களை இங்கு அழைத்து வருகிறார். அனைவரையும் விட கதிர் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த பிரச்சனைக்கு காரணமான ரத்னமும் பக்கத்து ஹோட்டல் முதலாளியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். பின்னர், வீட்டில் முல்லை ஒழுங்காக சாப்பிடாமல் இருக்க கதிர் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.