Pandian Stores Today Episode | 20.01.2023 Review | Vijay Tv
Pandian Stores Moorthy stunned
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று முன்னையிடம் மூர்த்தி எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் எனக் கூறுகிறார். கண்ணன் உட்பட அனைவரும் மூர்த்தியின் மேல் கோபமாக இருக்கிறார்கள். தூங்க முடியாமல் தவிக்கிற முல்லையை, பாட்டு பாடி கதிர் தூங்க வைக்கிறார். கதிரும் அந்த ஹோட்டலை பற்றி அனைத்து நினைவுகளையும் அசை போடுகிறார்.
காலையில் ஹோட்டலின் நிலை என்ன என கண்ணன் கேட்க அதை கதிரும் ஜீவாவும் பார்த்துக் கொள்ளலாம் என மூர்த்தி கூறுகிறார். பெண்கள் அனைவரும் இதைக் கேட்டு கோபப்படுகிறார்கள். இறுதியாக தனம் தாங்கள் மேல் எந்த களங்கமும் இல்லை என நிரூபிக்கும் வரை மூர்த்தியிடம் பேசப்போவதில்லை எனவும், பெண்களை தான் அந்த ஹோட்டலை பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறுகிறார். கோபமாக மூர்த்தி இடத்தை காலி செய்கிறார். ஊரில் இருப்பவர்கள் அனைவரும் ஜீவா மற்றும் மூர்த்தியிடம் ஹோட்டலில் நடந்ததை பற்றி கேட்பதோடு எபிசோடு முடிவடைகிறது.