மொட்டையடித்த கண்ணன்! Pandian Stores today episode 23.09.2021 update
Pandian Stores Kannan Aishwarya
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டுக்கு சென்ற கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கதறி அழுகிறார். தன் தாயின் மறைவுக்கு தான் காரணமோ என்று எண்ணி தாங்க முடியாமல் உடைந்து போகிறார். ஐஸ்வர்யாவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆறுதல் கூறுகிறார்.
பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் முருகன் புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்வதி அனைவரையும் தூங்குமாறு சொல்கிறார். மூர்த்தி தனத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு படுக்கிறார். அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்கள்.
அடுத்த நாள், கண்ணன் மொட்டை அடித்து தன் அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்துகொண்டிருக்கிறார். அங்கு வந்த மூர்த்தியும் மற்ற சகோதரர்களும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். கண்ணன் தன் தாயின் சமாதி இடம் உடைந்து போய் மனம் திறந்து பேசுவதை பார்த்து அவர்கள் வருத்தம் அடைகிறார்கள். போகும்போது மூர்த்தி கண்ணனை பார்க்க அதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.