அவமானப்படுத்தப்படும் கண்ணன்? Pandian Stores today episode 24.09.2021 review
Pandian Stores Kannan Aishwarya Broken
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுடுகாட்டில் இருந்து கண்ணனை விட்டுவிட்டு மூர்த்தியும் சகோதரர்களும் வீட்டிற்கு திரும்புகிறார்கள். பின்னர் வீட்டில் அனைவரும் லட்சுமி அம்மாவின் அஸ்திக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அப்பொழுது அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகிறார்கள். சில பல தயக்கங்களுக்கு பிறகு கண்ணனையும் அவரது அம்மாவின் ஆஸ்திக்கு வணக்கம் செய்ய குடும்பத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள்.
பின்னர், அங்கிருந்து கண்ணனை விட்டுவிட்டு அஸ்தியை கரைக்க மூர்த்தியும் சகோதரர்களும் செல்கிறார்கள். கண்ணனோ அவர்களை பின்தொடர்ந்து செல்கிறார். அங்கு போன பின்பும் சகோதரர்கள் கண்ணனை தவிர்த்துவிட்டு அவர்களே அஸ்தியை கரைக்கிறார்கள்.
வீட்டில் தனம் கடைசியாக லட்சுமி அம்மா கூறிய வார்த்தைகளை எண்ணி கண்ணனையும் கை விட்டு விட வேண்டாம் என அவர் கூறியதை வீட்டில் கூறுகிறார். லக்ஷ்மி அம்மாவிற்கு தனது மரணத்தைப்பற்றி முன்னரே தோன்றி இருக்க வேண்டும் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.