மூர்த்தியின் கோபம்! Pandian Stores today episode 25.09.2021 review
Pandian Stores Kannan Moorthy
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று கண்ணனை நன்கு பார்த்துக் கொள்ளும்படி மரணிக்கும் முன்பு லக்ஷ்மி அம்மா கூறியதாக தனம் கூறுகிறார். அதைக் கேட்டு கோபமடையும் மீனா அவர் பார்த்துக்கொள்ள சொன்னார் என்றால், ஏன் கண்ணனை வீட்டைவிட்டு அனுப்பும் பொழுது தனம் அமைதியாக இருந்தார் என கேட்கிறார். அதற்கு எங்களுக்கெல்லாம் வருத்தம் என தனம் சமாளிக்கிறார்.
பின்னர், குடும்பத்தினர் அனைத்து ஆண்களையும் உட்காரவைத்து உணவு பரிமாறுகின்றனர். அப்பொழுது, ஊர் பெரியவர் கண்ணனையும் உள்ளே அழைத்து அமர சொல்கிறார்ம் கண்ணனும் மூர்த்தியின் அருகில் அமர்கிறார். மூர்த்தி உடனே எழுந்து விட, கண்ணன் தான் வெளியே போய் விடுவதாக சொல்லிவிடுகிறார். ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
மூர்த்தி மற்ற இரு சகோதரர்களிடம் அவரால் கண்ணன் மீது கொண்டுள்ள கோபத்தை குறைக்க முடியவில்லை எனவும், சகோதரர்களை தன்னை விட்டுப் போக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்கிறார்கள்.