பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, தனமும் மூர்த்தியும் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் பார்த்துவிட்டு செல்ல, கண்ணன் ஐஸ்வர்யாவிடம் மிகவும் வருந்துகிறார். தன் குடும்பத்துடன் மீண்டும் சேர ஆசை இருப்பதாக கூறுகிறார். ஐஸ்வர்யாவும் முதலில் கோபப்பட்டாலும், பின்னர் தங்கள் நிலையை நினைத்து வருந்துகிறார்.

இருவருக்கும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்க வேண்டும் என்பது அப்பொழுதுதான் உரைக்கிறது. தனமும் மூர்த்தியும் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, பின்னர் தங்கள் கௌடவுனுக்கு வருகிறார்கள். அங்கே ரகசியமாக கதிரையும் ஜீவாவையும் கண்ணனுக்கு மளிகை சாமான்கள் கொடுத்து உதவ கேட்கிறார். இதை மூர்த்தி ரகசியமாக ஓட்டு கேட்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author