Pandian Stores today episode 31.08.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மூர்த்தி தனத்திடம் கோபப்பட்டது கண்டு வெகுண்டு எழுந்த கதிர் மூர்த்தயை அடக்குகிறார். மூர்த்தி புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்ள, தனம் கதிரை பெருமையோடு பார்க்கிறார். பின்னர் தங்களது பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த கதிர் முல்லைக்கு நடுவே அழகிய ஊடல் ஒன்று வர, பின்னர் அது முல்லை கதிருக்கு கொடுக்கும் முத்தத்தோடு முடிகிறது.

மீனாவின் கயல் பாப்பாவிற்கு தான் பணம் சேமிப்பது குறித்து தனம் பேசுவதைக் கண்டு மீனா பெருமை கொள்கிறார், ஆச்சரியப்படுகிறார்.

இன்னொரு பக்கம் கண்ணனுக்கு தனது அண்ணன்கள் தனக்கு செய்யும் உதவிகளை பற்றியும், அவர்களது அக்கறை பற்றியும் தெரியவர அவர் இன்னும் நெகிழ்ச்சி அடைகிறார். ஐஸ்வர்யாவா கண்ணனா கல்லூரிக்கு செல்வது யார்? வேலைக்கு செல்வது யார்? என்பதில் அவர்களுக்குள் வாக்குவாதம் வருகிறது. கடைசியாக லக்ஷ்மி அம்மா சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்து முல்லை அதிர்ச்சி அடைந்து அனைவரையும் கூப்பிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author