பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று மூர்த்தி குடும்பத்திற்கு தெரிந்த ஒருவர் தவறிவிட்டார் எனும் தகவலை ஐஸ்வர்யா கூறுகிறார். மீனா ஜீவாவிட விசாரித்துவிட்டு அவர் மாரடைப்பால் தான் மரணம் அடைந்தார் எனக் கூற மூர்த்தி அதிர்ச்சியாகிறார். மூர்த்தி தனது உடல் நிலையை நினைத்து மிகவும் கவலைப்பட அதை வைத்து ஐஸ்வர்யாவிற்கும் மீனாவிற்கும் சண்டை வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தனம் பம்பரமாக சுழன்று வேலை செய்வதை பார்த்து அனைவரும் ரசிக்க தொடங்குகிறார்கள். ஜீவா ஒரு படி மேல் சென்று தனது அண்ணி வேலை செய்வதை வீடியோ எடுத்து மீனாவிடம் வீடியோ காலில் வேறு காட்டுகிறார்.
கதிருக்கு இன்று வருத்தமான நாள் அவர் தவறுதலாக உணவு பரிமாறும் பொழுது ஒருவர் மீது சாம்பார் கொட்டி விடுகிறார். அந்த வாடிக்கையாளர் கோபப்பட கடை உரிமையாளர் கதிரை திட்டுகிறார். கடைசியாக தனம் ஜீவாவிடம் நிறைய வேலைகள் கூறுவதோடும் தனத்தின் அண்ணன் ஜகா கடைக்கு வரும்பொழுதும் தனம் நிறைய வேலை செய்வதோடு முடிவடைகிறது.