Pandian Stores Today episode review | 13.07.2022 | Vijay Tv
Pandian Stores Mullai worried
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று தனம் சுழன்று சுழன்று வேலை பார்ப்பதை பார்த்து ஜகா வருத்தம் அடைகிறார். தன் தங்கையிடம் வேலையை குறைத்து பார்த்து ஓய்வெடுக்குமாறு கூறுகிறார். குமரேசன் மாமாவோ ஊரே தனத்தை தான் மெச்சுகிறது எனக் கூறி பெருமை பேசுகிறார்.
முல்லை வீட்டில் தனியாக சமைத்து விட்டு கதிருக்கு போனில் அழைப்பு விடுக்கிறார். கதிரின் புது முதலாளி அவரை திட்டி விட்டு வீட்டிற்கு எல்லாம் சாப்பிட செல்ல வேண்டாம் எனக் கூற கதிரும் அதை முல்லையிடம் கூறுகிறார். முல்லை வருத்தமாக தனியாக சாப்பிட நினைத்து சாப்பாடே சாப்பிடாமல் செல்கிறார்.
தனம் வீட்டிற்கு உணவு அருந்தவும் ஜீவாவிற்கு உணவை எடுத்துச் செல்லவும் வருகிறார். கண்ணன் எப்பொழுதும் போல சோம்பேறியாக ஐஸ்வர்யாவிடம் தண்ணீர் எடுத்து வருமாறு கூறிவிட்டு ஐஸ்வர்யாவும் மீனாவும் சண்டை போட்டார்கள் என கூறுகிறார். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது கடினம் எனக் கூறி பாண்டியனை தனம் தன்னோடு கடைக்கு அழைத்து செல்கிறார்.
கதிருக்கு மேலும் மேலும் வருத்தம் அளிக்குமாறு புது வாடிக்கையாளர் ஒருவரும் அவரை கோபமாக திட்டி விடுகிறார்.