Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 01.08.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 01.08.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா தூங்கும்போது அவர் பிறந்தநாளுக்கு கேட்ட பரிசை கொடுக்க பாரதி முடிவு செய்தார். அதனால் ஹேமாவின் அம்மாவின் உருவத்தை அவரே வரைந்தார். பின் அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஹேமா குளித்து சாமி கும்பிட்டு புது ஆடை அணிந்து இனிப்பு சாப்பிட்டு ஹேமா தன் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஆனால் தன் பாட்டி சௌந்தர்யாவிடம் தன் அம்மாவை அப்பா காட்டுவாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். சௌந்தர்யாவும் கண்டிப்பாக நடக்கும் என்று சமாளித்தார். அதே நேரம் லக்ஷ்மி தூங்கி எழுந்ததும் கண்ணம்மா அவருக்கு வாழ்த்து சொல்லி கட்டி அனைத்து முத்தம் கொடுத்து எழுப்பினார். மேலும் லக்ஷ்மி குளித்துவிட்டு அவரும் புது ஆடை அணிந்து சாமி கும்பிட்டு பிறந்த நாளுக்கு செய்யும் அனைத்தையும் செய்தார். பின் கண்ணம்மா இன்று டாக்டர் பாரதி வீட்டுக்கு போக வேண்டும் ஹேமா பிறந்த நாள் kondaattathil கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். பின் அவர்களும் கிளம்பி பாரதி வீட்டுக்கு வந்தார்கள். அதே நேரம் சரவணன் மற்றும் சந்தியா அவர்களது முதல் திருமண நாளை கொண்டாட இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசு கொடுத்துக்கொண்டார்கள். சரவணன் மேலும் நிறைய இனிப்பு கடைகள் போட வேண்டும் என்று நினைத்து அவருக்கு ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் செய்து கொடுத்தார் சந்தியா. அதே போல் சந்தியாவுக்கு அவர் அணிய ஆசைப்பட்ட காக்கி யூனிபார்ம் ஒன்றை சரவணன் பரிசளித்தார். கூடிய சீக்கிரம் போலீஸ் ஆவதற்கு இந்த பரிசு எனவும் கூறினார். பின் காலையில் சிவகாமி ரவி இடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வனகினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…