Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 02.08.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 02.08.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஹேமா பிறந்த நாளுக்காக வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். ஆனால் வெண்பா வருவதை பார்த்த குடும்பத்தார்கள் எரிச்சல் அடைந்தார்கள். எவளவு அசிங்க படுத்தினாலும் மீண்டும் மீண்டும் வெண்பா நம் வீட்டு விசேஷத்துக்கு வந்து நிக்கிராலே என்று கோவம் கொண்டார்கள். மேலும் பாரதி ஹேமாவின் அம்மாவாக இவளை தான் காட்ட போகிறாரோ என்று ஒரு பதட்டமும் இருந்தது. சந்தியாவை அழைத்து கண்ணம்மா அவர்களது திருமண நாளுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று விசாரித்தார். அதற்கு சந்தியாவும் தான் சரவணனுக்கு கொடுத்த பரிசை பற்றியும் சரவணன் தனக்கு ஒரு போலீஸ் யூனிபார்ம் கொடுத்ததையும் கூறினார். உடனே அந்தியாவை போலீஸ் உடையில் பார்க்க வேண்டும் என்று கண்ணம்மா ஆசை பட்டார். சாதிய சிவகாமியை நினைத்து பயந்து வேண்டாம் என்று கூறினார். ஆனால் கண்ணம்மா அதை பற்றி கண்டு கொள்ளாமல் சந்தியாவை அந்த உடையை போட வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டார். மேலும் சரவணனை அழைத்தார். ஆனால் சரவணன் வருவதற்குள் அந்த அறைக்கு சிவகாமி மற்றும் சௌந்தர்யா வந்தார்கள். சிவகாமி சந்தியாவை போலீஸ் உடையில் பார்த்து சோகமாக இருந்தார். பல குழப்பத்தில் இருந்தார். ஆனால் சௌந்தர்யா, இந்த காலத்தில் பெண்கள் இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று இல்லை. இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம் என்று கூறினார். ஆனால் சிவகாமி தன்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…