Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 21.07.2022 | Vijaytv
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமம் தொடரில் இன்று, சிவகாமி வீட்டில் கரெண்ட் கூட இல்லாமல் தவித்தார்கள். சிவகாமி தனக்கு நடந்த அவமானமும் திருட்டு பட்டமும் நினைத்து அழுதார். ரவி அப்பா அவரை சமாதானம் செய்து சாப்பாடு ஊட்டிவிட்டார். இதை பார்த்த சந்தியா சரவணன் பாரதி கண்ணம்மா நால்வரும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதே நேரம் அர்ச்சனா தான் வைத்த நகைகளை நினைத்து கனவு கண்டார். ஒரு கொடி ரூபாய்க்கு சொந்தக்காரி என்று பூறிப்படைந்தார். பாரதி கண்ணம்மா இருவரும் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு இருவரும் பேச ஆர்பிதார்கள். ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து, இருவரையும் பாராட்டி, இருவருக்குள் இருவம்க்கும் நல்ல குணங்களை குறிப்பிட்டு மனம் விட்டு பேசினார்கள். பின் இருவருமே அசந்து தூங்கினார்கள். அடுத்த நாள் காலையில் பால்காரர் சிவகாமி அம்மா வீட்டுக்கு பால் ஊற்ற மறுத்துவிட்டார். திருட்டு குடும்பத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறினார். அதே போல் ரவி அப்பா கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்று வெறும் கையோடு வந்தார். அவரையும் திருட்டு பழி சுமத்தி அனுப்பினார்கள். அதே போல் செந்தில் கடையை அடைத்து வைக்கும் அளவுக்கு பொது மக்கள் இறங்கி விட்டார்கள். இதனால் குடும்பமே நிலை குலைந்தது. மேலும் அதிர்ச்சியாக பார்வதி மற்றும் அவரது மாமியார் வீட்டுக்கு வந்தார்கள். இந்த மாதிரி ஒரு சம்பவத்துக்கு பின் அந்த குடும்பத்தில் உள்ள பெண் எங்க வீட்டில் இருக்க கூடாது என்று ஊரே எதிர்த்து நிற்பதாக கூறினார். அதனால் இந்த பிரச்சனை முடியும் வரை இங்கேயே பார்வதி இருக்கட்டும் என்றும் கூறினார். இதை எல்லாம் பார்த்து சிவகாமி இது அனைத்துக்கும் இந்த சந்தியா மட்டுமே காரணம் என்றார். மேலும் நாத சாமியார் கெட்டவராகவே இருந்தாலும் பரவாயில்லை அந்த கேசை வாபஸ் வாங்க கூறினார். ஆனால் சரவணன் அதை மறுத்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…