Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 25.07.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 25.07.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சந்தியா, பார்வதி மற்றும் கண்ணம்மா மூவரும் அந்த பரிகாரம் செய்வதில் எதோ ஒரு உள்குத்து இருப்பதாக நினைத்தார்கள். ஆனால் ரவி அப்பா சொன்ன காரணத்தால் அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். மேலும் அந்த பரிகாரமாக செய்ய கோவிலுக்கு சென்று செய்ய வேண்டியதை செய்தார்கள். ஊர் மக்கள் அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி தீச்சட்டியை கொடுத்து ஊரை மூன்று முறை வலம் வர சொன்னார்கள். அவர்களும் அந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுடன் பாரதி, சரவணன் மற்றும் பாஸ்கர் மூவரும் பின் தொடர்ந்து வந்தார்கள் அவர்களுக்கு துணையாக. ஆனால் அதியும் பாதியில் ஊர் மக்கள் நிறுத்தி அனுப்பினார்கள். சற்று நேரத்தில் செல்வம் அவனது ஆட்களுடன் சந்தியா, பார்வதி, மற்றும் கண்ணம்மாவை சுற்றி வளைத்து நின்றார்கள். மேலும் சந்தியாவை தலையில் அடித்து இரத்தம் வழிய வழிய கீழே தள்ளி விட்டு பார்வதி மற்றும் கண்ணம்மாவை வண்டியில் கடத்தி சென்றான் செல்வம். சற்று நேரத்தில் சந்தியா மயங்கி கிடப்பதை பார்த்து சரவணன், பாரதி மற்றும் பாஸ்கர் மூவரும் அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள். மேலும் பார்வதி, கண்ணம்மா இருவரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை காணவில்லை. வீட்டில் அனைவரும் என்ன செய்வதென புரியாமல் நின்றார்கள். கண்ணம்மா மற்றும் பார்வதியை கட்டிப்போட்டு அவர்களை பார்த்து செல்வம் தன் பகையை கொட்டி தீர்த்தான். அதே நேரம் சாமியாரும் அந்த இடத்துக்கு வந்து தான் தான் இதற்கு காரணம் என்று தைரியமாக பேசினார். மேலும் அவர்களை கொன்று விடவும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…