Raja Rani 2 Serial Today Episode | 01.12.2021 | Vijaytv
rajarani2.01.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா அவரது செயலை நினைத்து வருந்தினார். சல்மாவின் துணியில் சூப் ஊற்றியதால் அவர் கோவமாக சென்றார். பின் நண்பர்கள் அவரை வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்கள். சரவணன் தன் அம்மா அப்பாவை அழைத்து வர முடியவில்லை என நினைத்து வருந்தினார். அவரை பார்த்த சந்தியா எதாவது செய்து குடும்பத்தை இங்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அங்கு போட்டி நடத்தும் நபர்களை பார்த்து பேசினார். அவர்களும் மேலிடத்தில் பேசி முடிவு எடுத்து சொல்வதாக கூறினார்கள். பின் போட்டியில் கலந்து கொண்டவர்கள். அனைவரை பற்றியும் அறிந்து கொள்ள ஒரு அறிமுக உரை கொடுத்தார்கள் அனைவரும். அதில் சரவணன் பேச முயற்சித்தார். ஆனால் அவரால் பேச முடியாததால் அவருக்கு எதாவது சமைக்கும்படி கூறினார்கள். அவரும் பிரெட் அல்வா செய்து அசத்தினார். அர்ச்சனா எப்படியாவது சரவணனின் கடையை நஷ்டத்தில் போக வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் தான் அந்த கடையை பார்த்துக்கொள்வதாக கூறினார். அதற்காக செந்தில் இடம் நாடகமும் போட்டு கடைக்கு போக அனுமதி வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…