ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா மற்றும் சரவணன் போட்டிக்காக தயார் ஆனார்கள், ஆனால் சரவணன் தன் குடும்பத்தில் யாரும் வரவில்லை என்று வருததம் கொண்டார். இதை பார்த்த சந்தியா நாளை உங்கள் வருத்தம் தீரும் என நம்பினார். இரவு சிவகாமி வீட்டில் அனைவரும் சென்னை கிளம்ப துணிமணி எல்லாம் எடுத்து வைத்து ரெடி ஆனார்கள். பார்வதி தான் சென்னை போவதாக பாஸ்கருக்கு அழைத்து கூறினார். அவரும் சந்தோசமாக போய் வர சொன்னார். பின் அனைவரும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். தன் குடும்பத்தை பார்த்த சரவணன் மிகவும் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் அடைந்தார். தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். பின் அம்மா வரவில்லையா என கேட்டார். ஆனால் சிவகாமி கோவிலில் பூஜை இருப்பதை காரணம் கூறி வரவில்லை என ரவி கூறினார். பின் அவர்கள் இருக்கும் அறையை பார்த்து வியந்து போனார்கள் அனைவரும். சிவகாமி கோவிலில் பூஜை செய்து முடித்தார். ஆனால் கிளம்பும்போது அவர் காலில் அடிபட்டு இரத்தம் வந்தது. இதனால் அவர் என்ன செய்தார்? காணொளியை பார்க்க…