Raja Rani 2 Serial Today Episode | 07.12.2021 | Vijaytv
Rajarani2.07.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பம் முழுவதும் இங்கு சென்னை வந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சந்தியாவை அள்ளி அணைத்து தன் மனநிலையை கூறினார். இதற்கு பரிசாக எனக்கு நீங்கள் இந்த போட்டியில் கலந்து வென்றால் போதும் என்று கூறினார் சந்தியா. அர்ச்சனா தன் தங்கை பிரியாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற நான் விட மாட்டேன் என்று கூறினார். அர்ச்சனா பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த சல்மா தானும் சந்தியாவுக்கு எதிரி தான் என்று அவரும் கூட்டணியில் சேர்ந்தார். சிவகாமி அபசகுணமாக நடப்பதை நினைத்து வருந்தினார்.பின் சரவணனிடம் பேசவேண்டும் என்று சந்தியாவுக்கு அழைத்து பேசினார். ஆனால் நடந்த எதையும் கூறாமல் வெறுமனே பேசிவிட்டு வைத்தார். பின் சந்தியா தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் சக போட்டியாளர்களிடம் அறிமுகபடுத்தினார் சரவணன் சந்தியா இருவரும். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…