Raja Rani 2 Serial Today Episode | 17.12.2021 | Vijaytv
Raja Rani 2. 17.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, இன்றைய போட்டியாக அரையிறுதி போட்டி நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் 8 பேரை 4 குழுவாக இணைந்து சமைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதில் சல்மா தனக்கு ஜோடியாக சரவணன் வரக்கூடாது என்று வேண்டினார். ஆனால் சரவணன் மற்றும் சல்மா தான் ஜோடியாக சமைக்கும்படி அமைந்தது. வேறு வழி இன்றி சல்மாவும் விருப்பம் இல்லாமல் இருந்தார். சரவணனை எந்த சமையலும் செய்ய வேண்டாம், அவருக்கு சமைக்க தெரியவில்லை என்று அவரை மட்டம் தட்டி பேசினார். சற்று நேரத்தில் அவர்கள் சமைக்க பாகற்காய் வந்தது. அதை பார்த்ததும் சல்மா அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு பாகற்காய் சமைக்கவும் தெரியாது பிடிக்கவும் பிடிக்காது என்று கூறினார். சரவணன் நம்பிக்கையாக இருந்தார். அதனால் சல்மா சரவணனிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூற, அவரும் மன்னிப்பு கேட்டார். பின் பாகற்காயில் 5 வகை சமையல் செய்யும்படி போட்டியில் அறிவித்து இருந்தார்கள். ஆனால் சரவணன் அதில் 6 வகை செய்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் போட்டியில் வெற்றி பெற்றாரா? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….