Raja Rani 2 Serial Today Episode | 18.11.2021 | Vijaytv
Rajarani2.18.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சரவணனுக்கு ஒரு பரிசு வழங்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவரை தனியாக அழைத்து ஒரு இடத்தில் வைத்து அந்த பரிசையும் கொடுத்தார். அதை ஆவலுடன் பிரித்துப் பார்த்தார் சரவணன். அதில் ஒரு கை கடிகாரம் இருந்தது. அதை பார்த்ததும் ரொம்ப அழகாக உள்ளது என்று கூறினார். பின் அதை சந்தியா அதி அவரது கையில் கட்டி விட்டு இது எப்போதும் உங்கள் கூடவே இருக்க வேண்டும் என்று கூறினார். சரவணன் அதை பார்த்து இதெல்லாம் நல்ல வேலைக்கு ஆபீஸ் செல்பவர்களுக்கு தன் நல்லார்க்கும், நான் எண்ணெய் சட்டிகிட்ட இதை எப்படி போட்டுக்கொள்வது என்று எண்ணினார். ஆனால் சந்தியா அவரை உற்சாக படுத்தி , உங்கள் கையில் இந்த கடிகாரம் வந்ததும் மிக அழகாக உள்ளது, இனி இந்த பரிசு பொருள் எப்போதும் உங்கள் கையில் இருக்க வேண்டும் என்று கூறினார். பார்வதி வீட்டு வாசலில் நின்று காய்கறிகள் வாங்கிகொண்டு இருந்தார். அங்கு பாஸ்கர் வந்து சேர்ந்தார். அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால் பார்வதி அவரை கிளம்புமாறு கூறினார். வெறுப்போடு பேசினார். அதற்கு பாஸ்கர் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…