Raja Rani 2 Serial Today Episode | 20.10.2022 | Vijaytv
Raja Rani 2.20.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை வீடியோ காலில் பார்த்தார்கள் குடும்பத்தார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா தலையில் ஹெல்மெட் போட்டு பேசிக்கொண்டு இருந்தார். வீட்டில் அனைவரும் சந்தோசமாக பேசினார்கள். ஆனால் நடுவில் அர்ச்சனா அவரது தலையில் முடி வெட்டியது போல் உள்ளதே என்று சந்தேகமாக பேசினார். மேலும் சிவகாமி அம்மாவையும் சந்தேக பட வைத்தார். இதனால் அந்த ஹெல்மெட்டை கலட்டுமாறு கூறினார். ஆனால் அதற்குள் சந்தியாவை அங்கு பயிற்சிக்கு அழைத்தார்கள். உடனே சரவணன் ஃபோனை கட் பண்ணினார். பின் சந்தியா அவரது பயிற்சியை தொடங்கினர். அப்போது பாக்ஸிங் போட்டி ஆரம்பம் ஆனது. அதில் சந்தியா எப்படியும் தோத்துதான் போவார் என்று அப்துல் நினைத்தார். ஆனால் அதற்கு மாறாக சந்தியா அவரது முழு முயற்சி செய்து அந்த போட்டியில் வெற்றியும் பெற்றார். இதை அப்துல் கூட பாராட்டினார். ஆனால் உயர் அதிகாரி கௌரி மீண்டும் சந்தியாவை அழைத்து பேசினார். நான் சொன்னது போல் எதற்கு முடி வெட்டவில்லை என்று கேட்டார். ஆனால் சந்தியா தன் முடியால் பிரச்சனை இல்லை, தன் மனநிலையை மாற்றி கண்டிப்பாக நல்ல விதமாக பயிற்சியை முடிப்பேன் என்றார். அதெக்கு கௌரி என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…