Raja Rani 2 Serial Today Episode | 21.12.2021 | Vijaytv

rajarani2.21.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் அங்கு நடக்கும் பார்ட்டிக்கு கிளம்பினார்கள். அங்கு சென்றதும் சிவகாமிக்கு அந்த இடம் பிடிக்கவே இல்லை. அங்கு உள்ள அனைவரும் சாப்பிட குடிக்க ஆட பாட என இருந்தார்கள். சிவகாமி கிளம்பலாம் என்று கூறினார்.ஆனால் ரவி இதெல்லாம் கிடைக்கும்போது அனுபவிச்சுக்கனும் என்று கூறினார். சற்று நேரத்தில் ஆதி டான்ஸ் ஆட கிளம்பினான். பின் அர்ச்சனா மற்றும் செந்திலும் சென்று ஆடினார்கள். இதை பார்த்த சந்தியா தனக்கும் சரவணன் உடன் ஆட நினைத்தார். பின் அவர்களும் ஆட சென்றார்கள். சிவகாமி மற்றும் ரவி இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். சாப்பிட எதாவது வாங்கி வர சென்றார் ரவி. ஜுஸ், கேக், ஸ்வீட் என வகை வகையாக எடுத்துவந்தார். அதில் இருந்த ஜுஸ்-ஐ மட்டும் சிவகாமி குடித்தார். அனைவரும் பாட்டு பாடி டான்ஸ் ஆடி குதூகலமாக இருந்தனர். சரவணன் மற்றவர்களுடன் ஆடுவதை பார்த்தால் சந்தியாவிற்கு பொறாமை வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…