Raja Rani 2 Serial Today Episode | 22.12.2021 | Vijaytv
rajarani2.22.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி தனக்கு இன்னும் ஒரு ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். உடனே ரவியும் வாங்க சென்றார். ஆரஞ்சு பழ ஜுஸ் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அங்கு இருந்தவர், இது ஆரஞ்சு ஜுஸ் இல்லை, இது ஒரு விதமான சரக்கு என்று கூறினார். அதிர்ந்து போனார் ரவி. பின் சிவகாமியின் நிலையை உணர்ந்து, உடனே தங்கள் அறைக்கு செல்ல முடிவு செய்தார். சிவகாமியை அழைத்ததற்கு, அவர் வர மறுத்தார். சரவணன் சந்தியா இருவரும் இணைந்து ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சந்தியா காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்களும் சிவகாமி இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அனைவருக்கும் சிவகாமி குடித்து இருந்த விஷயம் தெரியவந்தது. சிவகாமி தன் மகன் சரவணனை பற்றி பெருமையாக பேசினார். இந்த குடும்பம் உருவானதுக்கு காரணம் சரவணன் தான் என்று புகழ்ந்தார். பின் சந்தியாவை திட்ட ஆரம்பித்தார். அதை பார்த்து அர்ச்சனா சந்தோசத்தில் குதித்தார். சற்று நேரத்தில் சந்தியா தான் சிறந்த மருமகள் என சிவகாமி புகழ ஆரம்பித்தார்.அதை பார்த்த அர்ச்சனா எரிச்சல் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..