ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சரவணன் செந்தில் பார்வதி என அனைவரும் இந்த போட்டியில் எப்படியும் சரவணன் ஜெய்சுடுவான் என கூறினார்கள். சரவணன் சிக்கன் சமைப்பதில் கில்லாடி எனவும் கூறினார்கள். அர்ச்சனா அவரை நான் சமைக்க விட மாட்டேன் என நினைத்தார். அப்போது ஆதி அவரை மட்டம் தட்டி பேசினார், அப்போது சரவணன் தோல்வி அடைவது எல்லார் வாழ்விலும் உள் ஒன்று. உனக்கும் வரலாம் உன்னையும் 10 பேர் பார்த்து சிரிப்பார்கள் அதற்காக உன் நம்பிக்கையை விட கூடாது என்று கூறினார் சரவணன். அப்போது அங்கு வந்த சிவகாமி ஊரில் காப்பு கட்டியதாக அழைப்பு வந்தது என்று கூறினார். இதனால் அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என கூறினார். இதனால் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின் இந்த போட்டி நடத்தும் நபரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று கூறினார்கள். பேசவும் செய்தார்கள். ஆனால் அவர்கள் ஒருவருக்காக போட்டி விதிமுறையை .ஆட்ட முடியாது என்று கூறினார்கள். இதனால் குடும்பத்தில் குழப்பம் அதிகரித்தது. அர்ச்சனா இந்த விஷயத்தை சல்மாவிடம் கூறி தன் சந்தோசத்தை பகிர்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…