ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை ரசித்தார்கள். பின் சரவணன் குளிக்க வேண்டும் என்று கிளம்பினார். அவர் சென்று ரொம்ப நேரம் ஆகியும் குளிக்கும் சத்தம் கேட்காததால் சந்தியா சென்று பார்த்தார். சரவணன் தண்ணீர் சில்லென இருந்ததால் சுடு தண்ணீர் இல்லயே என குளிக்காமல் நின்று இருக்கிறார். பின் அதை சந்தியா சொல்லி கொடுத்தார். பாஸ்கர் பார்வதியை பார்க்க அவர் வீட்டிற்க்கு வந்து இருந்தார். அப்போது சிவகாமி ரவி அனைவரும் கோவிலுக்கு சென்று இருந்தார்கள். பாஸ்கர் பார்வதியை வெளியே கூட்டி செல்ல நினைப்பதாக கூறினார். பார்வதி பயந்தார். நாளை நீ வந்தே ஆக வேண்டும் என்று பாஸ்கர் கூறிவிட்டு உடனே கிளம்பிவிட்டார். சரவணன் சந்தியா இருவரும் கிளம்பி கீழே சாப்பிட வந்தார்கள். அப்போது அங்கு அவருடன் போட்டிக்கு வந்தவர்கள் சாபிட்டுகொண்டு இருந்தார்கள். இவர்களும் சேர்ந்து அமர்ந்தனர்.அப்போது ஒருவர் தன் புது துணி எப்படி உள்ளது என்று அங்கு இருந்த அனைவரிடமும் கேட்டார். அப்போது சந்தியாவிடமும் கேட்டார். அதற்கு அவர் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…