Raja Rani 2 Serial Today Episode | 30.12.2021 | Vijaytv
Raja rani2.30.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்தது பெரிய தவறுதான், மற்றவர்களை ஏமாற்றி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு செய்த விஷயம் என்று நடுவர்கள் நினைத்தார்கள். ஆனால் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் உண்மையை நாங்கள் ஒத்துகொண்டோம், நாங்கள் எங்கள் நிலையை ஏற்கனவே சொல்லியும் யாரும் எதும் ஆதரவாக செய்யவில்லை அதனால் தான் இப்படி ஒரு முடிவு எனவும் கூறினார். பின் நடுவர்களில் ஒருவர் தனக்கு சரவணனின் இப்போது உள்ள நேர்மை பிடித்துள்ளது, அவரது திரமையை மதிக்க வேண்டும் என்றார். அவர் சமைத்தது சிக்கன் இல்லை என்று நம்மாலே கண்டு புடிக்க முடியவில்லை. ஆனால் அவரின் கை பக்குவத்தால் ருசி அருமையாக இருந்தது அதனால் அவரை மீண்டும் போட்டியில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். பின் அனைவரும் இதை பற்றி பேசி முடிவும் எடுத்தார்கள். சரவணன் இந்த போட்டியில் தொடரட்டும் என்று கூறினர்கள்.இது சல்மா, அர்ச்சனா மற்றும் ஆதிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.சிவகாமி தன் மகனின் இந்த நிலைக்கு சந்தியாதான் காரணம் என்று புகழ்ந்து தள்ளினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….