Raja Rani 2 Serial Today Episode | 31.12.2021 | Vijaytv
rajarani2.31.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் கடைசி போட்டிக்கு தகுதி பெற்றதை பற்றி பேசி குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் எப்போதும் போல அர்ச்சனாவும் ஆதியும் கிண்டல் செய்தார்கள். பார்வதியோ சரவணன் வெற்றி பெற்று வீட்டுக்கு போவதை நினைத்து பார்த்து ஆவலாக உள்ளதாக கூறினார். ஆனால் ஆதி வீட்டுக்கு போவோம் என்று மட்டும் சொன்னால் பரவாயில்லை , வெற்றியோட போவது நடக்காத காரியம் என்று மட்டம் தட்டினார். ஆனாலும் சரவணன் மனம் தளரவில்லை.அடுத்த போட்டிக்கு தயார் ஆனார். நாளை போட்டியில் சமைப்பதற்கு தான் பயிற்சி செய்யப்போவதாக கூறினார். ஆனால் அந்த சமையல் தனக்கு புதிது என்பதால் அவர் செய்த எதுவுமே சரியாக வரவில்லை. இதனால் சோர்வடைந்த சரவணன் தன்னால் வெற்றி பெற முடியாதோ என நினைத்தார். ஆனால் சந்தியா மீண்டும் ஊக்குவித்தார்.சிவகாமி தன் கையால் சரவணனுக்கு ஊட்டினார். அப்போது சரவணனுக்கு ஒரு யோசனை வந்தது. நாளை என்ன சமைப்பது என்று முடிவு எடுத்தார். ஆனால் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…