Raja Rani 2 Today Episode | 01.06.2022 | Vijaytv

Raja Rani 2. 01.06.2022

Raja Rani 2. 01.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் மற்றும் செந்தில் மூவரும் விஷயம் தெரிந்து பதட்டமாக ஒரு இடம் விடாமல் பார்வதியை தேடினார்கள். சரவணன் தேடி தேடி பார்த்து சோர்ந்து போனார். மேலும் தன் தங்கையை இனி பார்க்கவே முடியாமல் போய் விடுமோ என்று பயந்தார். பழைய நினைவுகளை நினைத்து பார்த்தார். சந்தியாவிடம் தன் பயத்தை பதட்டமாக கூறினார். பார்வதியுடன் சேர்ந்து இத்தனை பேரையும் எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் தினரினார்கள். மேலும் இந்த விஷயம் தெரியாத குடும்பத்தை எப்படி பாதுகாப்பது என்று பல விதத்தில் யோசித்தார்கள். அந்த நேரம் மயிலாட்டம் ஆடி வந்தவர் தவறி கீழே விழுந்தார். விழுந்ததும் காலில் இருந்த கொலுசை பார்த்தார் சந்தியா. அதை பார்த்ததும் அது கண்டிப்பாக பார்வதியாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். மேலும் போலீஸ் துணையோடு பார்வதியை கோவிலுக்கு வெளியே அழைத்து வந்தார்கள். பார்வதியை சோதனை செய்து பார்த்து வெடிகுண்டு இருப்பதை அறிந்து கொண்டார்கள். மேலும் அதை எப்படி சரி செய்வது என்றும் யோசித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author