Raja Rani 2 Today Episode | 01.07.2022 | Vijaytv
Raja Rani 2. 01.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா காலில் விழுந்து கதறி அழுதார்கள். தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் சிவகாமி வாயை திறக்க இல்லை. உடனே ரவி அப்பா அவரின் முடிவு தான் என்ன என்று கேட்டார் அழுத்தமாக. உடனே சிவகாமி தனக்கு சந்தியா போலீஸ் ஆவதில் சம்மதம் என்றார். வீட்டில் அனைவரும் அதை அதிர்ச்சியாக பார்த்தார்கள். எனக்கு சந்தியா போலீஸ் ஆவதில் பரிபூரண சம்மதம் ஆனால் அதற்கு சில விதி முறைகள் இருக்கிறது என்று கூறினார். மேலும் பூஜை அறைகு சென்று மூன்று விளக்குகளை ஏற்றி வைத்து அது அனையாவிளக்கு என்றார். சந்தியா இந்த வீட்டு கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்களை சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும் இந்த விளக்கில் ஒன்றை அனைப்பேன். அதே போல், மூன்று முறை தவறுகளை மன்னித்து நடப்பேன். ஆனால் நாலாவது முறை நான் சொல்லும்படி போலீஸ் வேலைக்கு செல்லக்கூட்டாது என்று நிபந்தனை போட்டார். அதற்கு சந்தியா ஸ்டரும் யோசிக்காமல் அதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் சிவகாமி என்னால் சந்தியாவிடம் முகம் கொடுத்து பேச முடியாது என்றார். அதேக்கும் சம்மதித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..