Raja Rani 2 Today Episode | 02.02.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா வீட்டில் நடந்த பிரச்சினைகள் அனைத்தும் அர்ச்சனாவால் தான் என்று தெரிந்து கொண்டார். வீட்டிற்க்கு திரும்பும்போது பிரியாவை பார்க்கிறார். அவரை பார்த்ததும் குற்றவாளியை விசாரிக்கும் ஒரு காவல் அதிகாரியை போல் பேசினார். நல்லா இருக்கும் அம்மாவை இப்படி மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்ல எப்படி மனசு வந்தது என்று கேட்டார். இப்போ அதே மருத்துவமனையில் இருந்து தான் நானும் விசாரித்தேன், ஆனால் அங்கு உன் அம்மாவோ, அர்ச்சனாவோ இல்லை செந்திலோ யாரும் இல்லையே என்று கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பிரியா டுடன் அங்கு இருந்து கிளம்பினார். ஆனால் சந்தியா அவரை விடவில்லை. 8 மாசம் முன்னாடி என் மாமியார் மீது பொய் புகார் கொடுத்தது நீதானே என்று கேட்டார். அதற்கும் அவர் இல்லை என்றார். போலீசில் புகார் செய்ய போகிறேன் என்றதும் பயத்தில் உண்மையை உளரினார் பிரியா. தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் அம்மாவும் அக்காவும் தான் இதை செய்ய சொன்னார்கள் என்று கூறினார். பின் அர்ச்சனா செந்தில் இருவரும் குத்தாலம் சென்ற விஷயத்தையும் உலரினார். இதனால் இன்னும் சந்தேகம் அதிகரித்தது. ஒரு வேளை அந்த 5 லட்சம் பணத்தையும் இவர்கள் தான் எடுத்து இருப்பார்களோ என்று நினைத்தார்.பின் வீட்டுக்கு திரும்பிய சந்தியாவை சிவகாமி போன விஷயம் என்ன ஆச்சு என்று விசாரித்தார். சந்தியா எதுவும் புரியாமல் தெனரினார். உடனே அங்கு வந்த சரவணன் அதெல்லாம் வேலையை சரியாக செய்துவிட்டார் என்று பாராட்டினார். சந்தியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சனா செய்த அத்தானை விஷயத்தையும் நினைத்து பார்க்கிறார் சந்தியா. இந்த முறையும் மன்னித்து விடுவது சரியா என்று யோசித்தார். அடுத்து என்ன முடிவு எடுத்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…