Raja Rani 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. வீட்டில் அனைவரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சந்தியா மட்டும் அர்ச்சனாவின் சதியால் வீட்டில் இருந்தார். சரவணன் சந்தியாவை எதிர் பார்த்து காத்திருந்தார். விழாவுக்கு முக்கியமானவர்கள் வந்த பின் ஆரம்பித்தார்கள். சரவணனை மேடையில் அமர வைத்தார்கள். பின் சரவணன் படித்த பள்ளி முதல்வர் வந்து பேசினார். சரவணனை புகழ்ந்து பேசினார் மேடையில். பின் சரவணனை பேசும்படி கூறினார்கள். சரவணன் மேடையில் சந்தியாவை தேடினார். சந்தியா அங்கு வீட்டில் இருந்து கிளம்பும்போது தனக்கு ஒரு இஞ்சி டீ வேண்டும், ஒரு ஆம்லெட் வேண்டும், சுடு தண்ணீர் ஆவி பிடிக்க வேண்டும் என்று அடுத்து அடுத்து வேலை கொடுத்தார் அர்ச்சனா. பால் திரிந்தாதல் மீண்டும் பால் வாங்கி வந்து டீ போட்டார் சந்தியா. அப்போது திரிந்த பாலில் யாரோ எலுமிச்சையை பிழிந்து போட்டிருப்பது தெரியவந்தது. இது கண்டிப்பாக அர்ச்சனாவின் வேலையாக தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் டீ போட்டார். சரவணன் இனி காத்திருக்க வேண்டாம் என்று தான் கொண்டு வந்த கடிதத்தை படித்தார். அவருக்கு சந்தியாவின் ஆசை கனவு லட்சியம் என்ன என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author