Raja Rani 2 Today Episode | 02.06.2022 | Vijaytv
Raja Rani 2. 02.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை கோவிலுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து அவர் மீது கட்டி இருக்கும் வெடி குண்டுகளை எந்த சேதமும் இல்லாமல் நிறுத்தி வைத்தார்கள். உடனே சந்தியா பார்வதியை கட்டிப்பிடித்து அழுதார். உன்னை காப்பாற்றி விட்டோம் என்று கண்ணீர் விட்டார். ஆனால் பார்வதி இடம் யார் உன்னை கடத்தியது? யார் உன்னை மறைத்து வைத்தார்கள் என்று கேள்விகளை அடுக்கினார் சந்தியா. ஆனால் பார்வதி பதில் சொல்ல முயற்சிக்கும்போது படபடப்பில் செல்வம் என்ற பெயரை மட்டும் சொல்லி விட்டு மயங்கிவிட்டார். பின் பார்வதிக்கு டாக்டர் பரிசோதித்து அவரை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்தார்கள். அதற்குள் சந்தியா சரவணனுக்கு அழைத்து செல்வத்தை வெளியே கூட்டி வருமாறு கூறினார். சரவணனும் செல்வத்தை தேடி அலைந்தார். பின் மயக்கத்தில் இருந்து தெளிந்த பார்வதி இடம் சந்தியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரை மேலும் என்ன விவரம் தெரியும் என்று விசாரித்தார்கள். அப்போது தன செல்வம் நல்லவன் இல்லை, அவனும் ஒரு தீவிரவாதிதான் என்று கூறினார். இதை கேட்ட சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அப்போது தன செல்வம் எங்கெல்லாம் பொய் சொல்லி நம் வீட்டை ஏமாற்றி உள்ளார் என்பதே புரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…