Raja Rani 2 Today Episode | 02.09.2022 | Vijaytv
Raja Rani 2. 02.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி வீட்டுக்கு வந்ததும் அவனை மாற்றி மாற்றி அனைவரும் வறுத்து எடுத்தார்கள். சிவகாமி மற்றும் ரவி இருவரும் தனக்கு பிறந்த மகன் இந்த தவறை செய்து இருக்கிறான் என்று அசிங்கப்பட்டார்கள். மேலும் சரவணன் செந்தில் அனைவருமே ஆதியை திட்டி தீர்த்தார்கள். கடைசியில் ஆதி தன் வாயலே தன் தவறை ஒத்துக்கொண்டான். தன்னை மன்னித்து தன்னையும் ஜெஸ்ஸியையும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டான். பின் செந்தில் சரவணன் சந்தியா அனைவருமே இதற்கு முடிவு இவர்களை திருமணம் செய்து வைப்பது தான் என்று கூறினார்கள். ஆனால் சிவகாமி அந்த பெண்ணின் மதம் வேறு, கடவுள் வேறு என்றும் அது எப்படி சரி வரும் என்றும் கேட்டார். பின் வீட்டில் அனைவரும் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அதற்கும் இந்த திருமணம் நடந்தால் ஜெஸ்ஸி அவளது பெயர் மதம் அடையாளம் அனைத்தயும் அங்கேயே விட்டு வர வேண்டும் என்று கூறினார். மேலும் அவளது பெற்றோர்கள் உடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று கூறினார். ஆனால் ஸ்னாதிய இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க. .