Raja Rani 2 Today Episode | 02.11.2022 | Vijaytv
Raja Rani 2. 02.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வீட்டுக்கு வந்ததும் அவரது அம்மா அப்பாவிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினார். பின் இந்த வியாபார சங்க தலைவராக நின்ற பரந்தாமன் ஊழல் செய்து ஏமாற்றியதால் இந்த முறை போட்டியில் என்னை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் என கூறினார். இதை கேட்டதும் சிவகாமி அம்மா வருத்தப்பட்டார். இந்த மாதிரி வேலையெல்லாம் செய்தால் உன் நிம்மதி போய் விடும், ஊர் வம்பு நமக்கு எதுக்கு என்று கூறினார். ஆனால் ரவி அப்பா இதில் சரவணன் பெருமை தன் பட வேண்டும். சந்தியா போலீஸ் ஆகி வீடு திரும்பும்போது சரவணன் வியாபார சங்க தலைவராக இருந்தால் நம் வீட்டுக்கு பெருமை தானே என்று கூறினார். இதை கேட்டதும் சிவகாமி அம்மாவும் அதற்கு சம்மதித்தார். பரந்தாமன் தன் மேல் உள்ள பயம் அனைவருக்கும் போய் விட்டது, அதனால் தான் எனக்கு எதிராக சரவணனை நிக்க வைக்க திட்டம் போடுகிறார்கள் என்று கோபப்பட்டார். சரவணனுக்கு எப்படி தன் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று யோசிக்கவும் ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….