Raja Rani 2 Today Episode | 03.03.2022 | Vijaytv
Raja Rani 2. 03.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மேடையில் பேச அந்த கடிதத்தை படித்து பார்த்தார். அதில் சந்தியாவின் கனவு லட்சியம் ஒரு போலீஸ் ஆவது என்பது அவருக்கு புரிந்தது. அதை படித்ததும் அவரால் மேடையில் நிதானமாக இருக்க முடியவில்லை. பேச நினைத்ததையும் பேச முடியவில்லை. அவரால் முடிந்ததை திக்கி திக்கி தன் மனைவியாலும் தன் அம்மாவும் தான் தனக்கு துணையாக இருந்ததாக கூறினார். பின் அவருக்கான மரியாதையை ஊர் மக்கள் செய்தார்கள். குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் சரவணன் சந்தியாவை தேடினார். சந்தியா அவருக்கு கிடைத்த மரியாதையை அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை. நினைத்து சந்தோசம் கொண்டார். ஆனால் சரவணன் வந்த உடனே சந்தியாவுக்கு இது போல் எதவ்து கனவு லட்சியம் இருந்து இருக்க வேண்டும் அதை கூறுமாறு கேட்டார். ஆனால் சந்தியா அதை சொல்லவே இல்லை. தனக்கு அப்படி எந்த கனவும் இல்லை என்றார். பின் எதேதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால் சரவணன் நீங்க பொய் சொல்கிறீர்கள் என்று நேரடியாகவே கூறினார். பின் சந்தியாவின் அண்ணன் மணியை அழைத்து பேசினார். அவரிடம் உண்மையை கேட்டார். சந்தியாவுக்கு இப்படி ஒரு லட்சியம் இருப்பது உண்மையா என்று கேட்டு தெரிந்து கொண்டார். பின் சந்தியாவின் கனவை நிறைவேற்றுவேன் என்று அவருக்கு உறுதியாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….