Raja Rani 2 Today Episode | 03.11.2022 | Vijaytv
Raja Rani 2. 03.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சரவணன் இரவில் வெகு நேரம் பேச வேண்டாம் என்று சிவகாமி அம்மா தடுத்து நிறுத்தியது ரவி அப்பாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதை கேட்டாலும் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் சிவகாமி. அடுத்த நாள் சந்தியாவுக்கு வைத்த பயிற்சியில் காட்டுப்பகுதியில் குறிப்பிட்ட தூரம் ஓடி வர வேண்டும் என்று கூறினார்கள். அந்த பயிற்சிக்கு சந்தியாவும் தயார் ஆனார். ஆனால் அதில் ஓடும்போது ஒருவர் கீழே விழுந்து அடி பட்டதை பார்த்து அங்கேயே நின்றார். ஆனால் மற்றவர்கள் யாருமே அவரை கண்டுகொள்ளாமல் சென்றார்கள். சந்தியாவால் அப்படி ஒருவரை கஷ்டத்தில் விட்டு வருவதை விரும்பவில்லை. தன் மதிப்பெண் குறைந்தாலும் பரவாயில்லை என்று அவருக்கு உதவினார். அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தார். இதனால் சரியான நேரத்துக்கு அவரால் போய் சேர முடியவில்லை. இதனால் கௌரி கோவத்தில் கத்தினார். இது உனக்கு மதிப்பெண் எடுக்க வேண்டிய நேரம். இப்படி சேவகம் செய்ய வரவில்லை என்று திட்டினார். பரந்தாமன் செந்தில் கடைக்கு வந்து துணி எடுப்பது போல் வந்து பேசி அவர்களுக்கு பதவி ஆசையை கிளப்பினார். தான் இனி இந்த வியாபார சங்க தலைவராக நிற்க மாட்டேன், எனக்கு பதிலாக நீயே நில் என்றார். செந்தில் இதெல்லாம் எனக்கு சரி வராது என்றார். ஆனால் அர்ச்சனா இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும், ஊருக்குள் அந்தஸ்து கூடும் என்று கூறி அவர் மனதை மாற்றினார். செந்திலுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அர்ச்சனா சொன்னதால் அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…