Raja Rani 2 Today Episode | 04.01.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தன்னால் இந்த போட்டியில் சமைக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் சமைத்தார். ஆனால் அவர் என்ன சமைக்கிரார் என்று தெரியாமல் குடும்பத்தார்கள் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதி எப்போதும் போல அவரை மட்டம் தட்டினார்கள். பின் நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்ன சமைக்கிரார்கள் என்று பார்வையிட்டார்கள். அப்போது சரவணன் தான் கேப்பை கூழ், மொச்சை குழம்பு , மிளகாய் வத்தல் என நம் பாரம்பரிய சாப்பாட்டை சமைப்பதாக கூறினார். இதை கேட்டதும் சிவகாமி சந்தோசம் கொண்டார். அவனால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நம்பினார். பின் மூன்று போட்டியாளர்கள் சமைத்ததையும் சாப்பிட்டு ருசித்து பார்த்தார்கள் நடுவர்கள். சரவணன் செய்ததை புதிதாக சாப்பிடும் வெளிநாட்டு நடுவர் கூட அந்த ருசி அருமையாக உள்ளது என்று கூறி மீண்டும் வாங்கி சாப்பிட்டார். பின் முடிவுகளை பேசி முடிவு செய்கிறோம் என்று கூறினார்கள்.சிவகாமி சந்தியா இருவரும் சந்தோசத்தில் குதித்தார்கள். முடிவுகளுக்காக அனைவரும் காத்திருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…