Raja Rani 2 Today Episode | 04.01.2023 | Vijaytv
Raja Rani 2. 04.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னை சுற்றி எதோ ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று யோசித்தார். சரவணன் இடம் அதை கூறவும் செய்தார். தனக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று கூறினார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் உண்மையை பேசுகிறார், யார் பொய்யாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை என்று கூறினார். ஆனால் சரவணன், பதட்டம் இல்லாமல் பொறுமையாக யோசிக்க வலியுறுத்தினார். பின் சிவகாமி, ரவி என்று அனைவரும் சந்தியாவிடம் பேசி மகிழ்ந்தார்கள். செந்தில் இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று பரந்தாமன் பணத்தை இரைத்தார். மேலும் ஒரு ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைத்தார். அதற்கு செந்திலை வைத்து காய் நகற்றினார். ஜெஸ்ஸி பார்லருக்கு போலீஸ் மீண்டும் வந்து அந்த நகையை பற்றி விசாரித்தார்கள். ஜெஸ்ஸி அதை அப்போதே சரி செய்து விட்டோம் என்று கூறினார். ஆனல் அந்த போலீஸ் இன்னும் இரண்டு நாட்களில் அந்த நகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறினார். சற்று நேரத்தில் ஜெஸ்ஸியின் அம்மா அப்பா இருவரும் அங்கு வந்தார்கள். ஜெஸ்ஸி நலன் விசாரித்தார்கள். பின் ஆதி அடிக்கடி பணம் வாங்க வருவதை பற்றி ஜெஸ்ஸிக்கு தெரிய வந்தது. இருந்தும் விட்டுக்கொடுக்காமல் ஆதி தான் சொல்லி தான் பணம் வாங்கினார் என்று கூறி சமாளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…